குறைந்த விலையில் அப்பிள் ஐபேட் அறிமுகம்!!

298

அப்பிள் நிறுவனம் ஐபேட் மினி 4, இரண்டு ஐபேட் ப்ரோ சாதனங்கள் மற்றும் புதிய ஐபேட் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்துள்ளது.

அப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய ஐபேட் 9.7 இன்ச் திரை கொண்ட மாடல் 329 டொலர் அதாவது இலங்கை மதிப்பில் சுமார் 50,000 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 32 ஜிபி மெமரி மற்றும் Wi-Fi வசதிகள் உள்ளதுடன் சில்வர், தங்கம் மற்றும் சாம்பல் ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகின்றன.

இதேவேளை, 7.9 இன்ச் திரை கொண்ட ஐபேட் மினி 4 இன் விலையை அப்பிள் குறைத்துள்ளது. இந்த மாடல் 128 ஜிபி மெமரியுடன் 399 டொலர்கள் அதாவது இலங்கை மதிப்பில் சுமார் 60,528 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ஐபேட் சாதனங்களில் அதிவேக A9 சிப் மற்றும் பிரகாசமான திரை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஐபேட் எயார் 2- வை விட சற்றே பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் வடிவமைப்புகளில் சிவப்பு நிற ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதேபோல், ஐபோன் SE மாடல் 32 மற்றும் 128 ஜிபி மெமரியுடன் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

புதிய சாதனங்களுடன் வீடியோக்களை உருவாக்கி, அதனை ஐஓஎஸ் சாதனங்களைப் பயன்படுத்தும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியை வழங்கும் செயலியையும் அப்பிள் அறிமுகம் செய்துள்ளது.

கிளிப்ஸ் (clips) என பெயரிடப்பட்டுள்ள புதிய செயலியில் வீடியோக்களை அழகாக்க பல்வேறு வசதிகளும், இவற்றை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது அப்பிளின் சொந்த குறுந்தகவல் செயலிகளில் பகிர்ந்துகொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.