தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவரா நீங்கள் : அப்படியாயின் இதைக் கொஞ்சம் படியுங்கள்!!

407

ஆழ்ந்த தூக்கம், அடுத்த நாள் பொழுதை சுறுசுறுப்புடன் தொடங்குவதற்கு மிக அவசியம். ஆனால் உண்மை என்னவென்றால், இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

அவர்கள் நீண்ட நேரம் கடந்த பின்னரே சிரமப்பட்டு தூங்குகிறார்கள். அப்படி தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு தான் இந்த முறைகள்…

தூங்க செல்வதற்கு முன்பாக இளம் சுடுநீரில் குளியல்போடுவது நல்லதுகுளிக்கும் நீரில் சில துளி லாவண்டர் ஆயில் அல்லது ஜாஸ்மின் ஆயிலை கலப்பது நறுமணம் பரப்பி தூக்கத்தில் ஆழ்த்தும்.

தூக்கத்திற்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இரவில் பிரகாசமான வெளிச்சம் மூளையின் ஓய்வுக்கு தடையாக அமையும். ஆகையால் தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே அறையில் மங்கலான வெளிச்சம் பரவட்டும்.

பகல் வேளையில் ஆழ்ந்த தூக்கத்திற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. தொடர்ந்து பகல் நேரத்தில் தூங்கும் வழக்கத்தை கடைப்பிடித்தால் இரவு நேர தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பது குறைய தொடங்கும். அதனால் இரவில் ஆழ்ந்து தூங்காமல் அவதிப்பட வேண்டியிருக்கும்.

இரவில் தூங்குவதற்கு முன்பு எளிய வகை யோகாசன பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. அவை கடினமான பயிற்சியாக அமைந்துவிடக்கூடாது. நிதானமாக கை, கால்களை அசைக்கும்படி இருக்க வேண்டும். அவை மன அழுத்தத்தை குறைத்து தூக்கத்திற்காக மனதையும் ஒருங்கிணைக்கும்.

மது அருந்திவிட்டு தூங்கச் செல்வதை தவிர்த்திடுங்கள். அதிலிருக்கும் ஆல்ஹகால் தொடக்கத்தில் மயக்க நிலைக்கு கொண்டு சென்று தூக்கத்தை வரவழைப்பதுபோல் தோன்றும். ஆனால் சில மணி நேரத்திலேயே தூக்கத்தை கலையச்செய்துவிடும்.