பாலியல் வல்லுறவின்போது பெண் அழாததால் சந்தேக நபர் விடுதலை : இத்தாலியில் சம்பவம்!!

270


பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோது, பாதிக்கப்பட்ட பெண் அழாததைக் காரணம் காட்டி சந்தேக நபர் விடுவிக்கப்பட்ட சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது.



இந்தத் தீர்ப்பால் முழு நாடுமே அதிர்ச்சிக்குள்ளான நிலையில், இது குறித்து விசாரணை நடத்துமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு இத்தாலிய நீதித் துறை அமைச்சர் அண்ட்ரியா ஓர்லண்டோ உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரும் பாதிக்கப்பட்டவரும் ஒருவரை ஒருவர் முன் பின் அறிமுகமானவர்களே என்பதனாலும், சந்தேக நபர் குற்றத்தில் ஈடுபடும்போது அவரை எதிர்க்கப் போதுமானவரை முயற்சி செய்யவில்லை என்பதனாலும், அழவில்லை என்பதனாலும் சந்தேக நபரை விடுவித்ததாக நீதிபதி தெரிவித்துள்ளார். இதன்போது “போதும்” என்று மட்டுமே பாதிக்கப்பட்டவர் நீதிமன்றில் தெரிவித்ததாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.



தனக்கு அறிமுகமானவர் என்பதால் அவரது செய்கையை குறித்த பெண் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்றும், நன்கு அறிமுகமானவர் இதுபோன்ற அதிர்ச்சியான செயல்களில் இறங்கும்போது, அவரை உடனடியாக முழுமையாக எதிர்க்க முடியாத சூழ்நிலைக்குப் பெண்கள் தள்ளப்பட்டுவிடுவதாகவும், எவ்வாறெனினும் இதுவும் பலாத்காரமாகவே கருதப்படவேண்டும் என்றும் இத்தாலியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.