915 அதிஷ்ட நாணயங்களை விழுங்கிய ஆமை சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

298

தாய்­லாந்தில் 915 நாண­யங்­களை விழுங்­கிய கட­லா­மை­யொன்று, சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்னர் உய­ரி­ழந்­துள்­ளது. 25 வய­தான இந்த கட­லாமை, தாய்­லாந்தின் சோன்­பூரி மாகா­ணத்­தி­லுள்ள பூங்­கா­வொன்றின் தடா­கத்தில் சுமார் 20 வரு­டங்­க­ளாக வசித்து வந்­தது.

அத்­ த­டா­கத்தில் நாண­யங்­களை வீசு­வது தமக்கு அதிஷ்­டத்தை ஏற்­ப­டுத்தும் என அங்­குள்ள மக்கள் நம்­பு­கின்­றனர். இவ்­வாறு வீசப்­படும் நாண­யங்­களை மேற்­படி ஆமை விழுங்கி வந்­ததால் அதற்குப் பாதிப்பு ஏற்­பட்­டது.

தாய்­லாந்தின் சூலா­லோங்கோர்ன் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த மிருக வைத்­தி­யர்­களால் இம்­ மாத முற்­ப­கு­தியில் மேற்­படி ஆமை சத்­தி­ர­சி­கிச்­சைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு, அதன் வயிற்­றி­லி­ருந்து 915 நாண­யங்கள் அகற்­றப்­பட்­டன. சத்­தி­ர­சி­கிச்­சைக்­குள்­ளான இந்த ஆமை சுவா­சிப்­ப­தற்கு சிர­மப்­பட்ட நிலையில் கடந்த ஞாயி­றன்று இரவு அதி­ தீ­விர சிகிச்சைப் பிரி­வுக்கு கொண்­டு­செல்­லப்­பட்­டது.

திங்­கட்­கி­ழமை அதற்கு அவ­சர சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டி­ருந்­தது. எனினும் அதை­ய­டுத்து, கோமா நிலைக்குத் தள்­ளப்­பட்ட ஆமை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உயி­ரிழந்­து­விட்­ட­தாக மருத்துவர்கள் தெரிவிவித்துள்ளனர். இரத்தம் நஞ்சாகியமையே இது உயிரிழ ந்தமைக்கு காரணம் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.