தமிழ் சிங்கள புத்தாண்டு சுபநேரங்கள்!!

861

சித்திரைப் புத்தாண்டு பிறப்பதற்கான புண்ணியகாலம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று (13) மாலை 7.40 தொடக்கம் நாளை (14) காலை 8.28 வரையாகும்.

இதன்படி, நாளை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.04 மணிக்கு ஏவிளம்பி புத்தாண்டு பிறக்கின்றது.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி எதிர்வரும் 14.04.2017 வெள்ளிக்கிழமை (சித்திரை 01) அதிகாலை 12.48 மணிக்கு அபரபக்க திருதியை திதியில், விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில், மகர லக்கினத்தில், மகர நவாம்சத்தில் ´ஏவிளம்பி´ வருடம் பிறக்கின்றது.

ஏவிளம்பி புத்தாண்டு பிறப்பன்று மஞ்சள் மற்றும் கபில நிறத்திலான புத்தாடைகளை அணிவது சிறந்தது.

சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்.

புனர்பூசம், சித்திரை 3ம் 4ம் பாதம், சுவாதி, விசாகம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இந்த நட்சத்திரங்களில் பிறந்தோர் தவறாது மருத்து நீர் வைத்து நீராட வேண்டும்.

அதேவேளை, சிங்கள முறைப்படி, 14 ஆம் திகதி அதிகாலை 5.41 க்கு வடக்கு நோக்கிய படி விளக்கேற்றி, 7.05 மணியளவில் பணிகளை ஆரம்பித்தல், உணவு உண்ணல் போன்ற விடயங்களை மேற்கொள்ளலாம்.

அத்துடன், தலைக்கு எண்ணெய் வைக்கும் சம்பிரதாய சடங்கு 15 ஆம் திகதி முற்பகல் 11.04 மணிக்கு பின்னர் வடக்கு நோக்கிய படி இடம்பெறும்.

இதுதவிர, தொழில்களுக்கு செல்லும் சுபநேரம் ஏப்பிரல் 17 ஆம் திகதி காலை 6.28 மணி.