101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து காலை உணவு உட்கொண்டு துபாயில் புதிய கின்னஸ் சாதனை!!

336

துபாயில் 101 நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் ஒன்­றி­ணைந்து காலை உணவு உட்­கொண்­டதன் மூலம் புதிய கின்னஸ் சாதனை படைத்­துள்­ளனர்.

ஐக்­கிய எமி­ரேட்ஸில் பல்­லி­னத்­துவம் மற்றும் சக­வாழ்வு குறித்த சாத­க­மான ெசய்­தியை பரப்பும் நோக்­குடன், துபா­யி­லுள்ள சீக்­கி­யர்­களின் ஆல­ய­மான குருத்­வா­ரா­வினால் இந்த நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

101 நாடு­களைச் சேர்ந்த 600 இற்கும் அதி­க­மானோர் இந்­நி­கழ்வில் பங்­கு­பற்­றினர். ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுக்­கான இந்­தியத் தூதுவர் நவ்தீக் சிங் சூரி, ஐக்­கிய நாடு­களின் பிர­தி­நிதி போர்ட் மௌரிங் மற்றும் பல நாடு­களின் ராஜ­தந்­தி­ரி­களும் இந்­நி­கழ்வில் பங்­கு­பற்­றினர். இவர்கள் அனை­வரும் தரையில் அமர்ந்து உணவு உட்கொண்­டனர்.

மிக அதிக எண்­ணிக்­கை­யான நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் ஒன்­றி­ணைந்து காலை உணவு உட்­கொண்ட நிகழ்­வாக இது கின்னஸ் சாதனை நூலில் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.

கின்னஸ் சாதனை நூல் வெளி­யீட்­டா­ளர்­களின் நடுவர் ஹோடா கச்சாப் இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கட­வுச்­சீட்டை பரி­சோ­தித்து அவர்­களின் நாடு­களை உறுதிப்படுத்­திக்­கொண்டார்.

இதற்­குமுன் 2015 ஆம் ஆண்டு இத்­தா­லியில் நடை­பெற்ற மிலான் எக்ஸ்போ கண்­காட்­சி­யின்­போது 55 நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் ஒன்­றி­ணைந்து உணவு உட்­கொண்­ட­மையே கின்னஸ் சாத­னை­யாக இருந்தது எனவும் துபாய் நிகழ்வு இந்த எண்ணிக்கையை ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது எனவும் நடுவர் ஹோடா கச்சாப் அறிவித்தார்.