பிச்சை எடுத்துதான் படிக்க வைக்கிறேன் : செத்துவிடலாம் என்றுகூட தோன்றும் : கண்ணீர் மல்க தாய்!!

255

தமிழகத்தின் திருப்பத்தூர் அருகே உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு, தற்போது சென்னையில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய நிலைமை பற்றி கூறுகையில், சின்ன வயதிலேயே அப்பா, அம்மா இறந்துவிட்டார்கள். உறவினர்கள் என்னைப் பிச்சை எடுக்கிற கும்பல்கிட்டே விற்றுவிட்டார்கள் . சின்ன வயதிலிருந்தே பிச்சை எடுக்கிறது பிழைப்பாகிவிட்டது.

பிச்சை எடுக்கும்போது எல்லாரும் கேவலமா பார்ப்பாங்க. சிலர் அசிங்கமா திட்டி துரத்துவாங்க. அந்த நேரத்தில் செத்துடலாம்னுகூட தோணும் என்று கண் கலங்கி கூறியுள்ளார்.

திருப்பத்தூரில் நான் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த வெங்கடேசைப் பார்த்தேன்.

என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பினார். நமக்கும் ஒரு துணை வேனும் என்பதால் திருமணம் செய்து சென்னைக்கு வந்தோம்.

இங்கு தான் எங்கள் குடும்ப வாழ்க்கை ஆரம்பித்தது. யார்கிட்டயும் பிச்சை கேட்கக் கூடாது, எங்கேயாவது வேலைக்குப் போகலாம்னு முடிவுப் பண்ணினோம். ஆனால், வேலைக் கேட்கப்போனா இடத்துல எல்லாம் நம்பாமல் விரட்டினாங்க. வேற வழியில்லாமல் மறுபடியும் பிச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டோம்.

எங்களுக்கும் பல ஆசைகள் இருக்கு. ஆனா, அந்த ஆசைகள் எல்லாம கனவாவே இருக்கும். எங்களுக்கு இரண்டுப் பெண் குழந்தைகள். நாம் தான் இப்படி இருக்கோம். நம்ம குழந்தைங்கள் படிச்சு, உழைச்சு சம்பாதிக்கட்டும் முடிவுப் பண்ணினோம்.

இரண்டு பேரும் திருப்பத்தூர் விடுதியில் தங்கி படிக்கிறாங்க. எங்களை கேவலமா பேசின சொந்தக்காரங்களின் பிள்ளைகள் படிக்கிற அதே பள்ளியில் படிக்கிறாங்க. பிச்சை எடுத்துதான் படிக்க வைக்கிறேன். எங்களை மாதிரி வாழ்க்கை இவங்களுக்கு இருக்காதுங்கிற நம்பிக்கையோடு இருக்கோம் என்று கூறியுள்ளார்.