12 மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரம்!!

218

டெங்கு நோயின் தாக்கம் 12 மாவட்டங்களில் தீவிரமாகியிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் 50 ஆயிரம் பேர் இந்த நோயால் பீடிக்கப்பட்டிருப்பதாகவும், இவ்வருடத்தில் மாத்திரம் 130 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் ஆலோசகரான விசேட வைத்திய நிபுணர் பிரெச்சிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

டெங்கு பரவும் இடங்களைச் சுத்திகரிப்பதற்காக சுகாதார அமைச்சு எதிர்வரும் வியாழக்கிழமை முதல் நாடெங்கும் இருநாள் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான பல சுத்திகரிப்புப் பணிகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இம்முறை சுத்திகரிப்புப் பணிகளின் முறை வித்தியாசமாக இருக்கும் எனவும், இந்த இருநாள் பணி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.