9 ஆண்டுகளாக வெளிநாட்டில் மாட்டிக் கொண்ட பெண் : மீட்டு தர பெற்றோர் கெஞ்சல்!!

325


 
பாகிஸ்தானில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிக்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் தங்கள் மகளை மீட்டு தர வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பெண்ணின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்தியாவை சேர்ந்த உஸ்மா என்ற பெண் பாகிஸ்தானில் தான் துன்புறுத்தப்படுவதாக அங்குள்ள இந்திய தூதரகத்தில் முறையிட்டார்.



இதையடுத்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உஸ்மாவை இந்திய செல்ல அனுமதித்தது. இதனை தொடர்ந்து இந்தியா வந்த உஸ்மா வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்

இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த முகமது பேகம் என்பவரின் பெற்றோர் இதே போன்றதொரு பிரச்சனையோடு சுஷ்மாவை நாடியுள்ளனர்.
அவர்கள் கூறுகையில், கடந்த 9 ஆண்டுகளாக எங்கள் மகள் முகமது பேகம் பாகிஸ்தானில் தவித்து வருகிறார்.



அங்கு பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் அவரை, உஸ்மாவை வீட்டது போல் சுஷ்மா சுவராஜ் எங்களுக்கு மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



ஓமன் நாட்டில் பணிபுரிந்தபோது, முகமது யூனுஸ் என்பவரால் ஏமாற்றப்பட்டு தங்கள் மகள் திருமணம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.