அமெரிக்காவில் சாதித்துக் காட்டிய 12 வயது இந்திய வம்சாவளி சிறுமி!!

538

அமெரிக்காவைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர் ஆங்கில வார்த்தைகளின் எழுத்துகளை சரியாகச் சொல்லும் போட்டியின் பரபரப்பான இறுதி சுற்றில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் அனன்னயா(12). இவர் ஒரு இந்திய வம்சாவளி சிறுமி ஆவார்.

இந்நிலையில் அனன்யா வாஷிங்டனில் நடைபெற்ற Cripps National Spelling Bee எனப்படும் ஆங்கில வார்த்தைகளின் எழுத்துகளை சரியாகச் சொல்லும் போட்டியில் பங்குபெற்றுள்ளார்.

இப்போட்டியில் பங்கு பெற்ற அவர் பல போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இறுதிச்சுற்றில் அனன்யா, ஓக்லஹோமாவை சேர்ந்த 14 வயது சிறுவன் ரோஹன் ராஜீவ்வுடன் மோதியுள்ளார்.

இருவரும் பெரும்பாலான வார்த்தைகளை சரியாக உச்சரித்ததால், யார் தவறிழைப்பார்கள் என்று ஒருவரை ஒருவர் மற்றவர்களுக்காக காத்திருந்தனர்.

அந்த நேரத்தில் மராம் (marram) என்ற சொல்லை ரோஹன் தவறாக உச்சரிக்க, அனன்னயா இரு வார்த்தைகளை சரியாக கூறி போட்டியில் வெற்றி பெற்றார். ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய – அமெரிக்க பிரஜை ஒருவர் வெல்வது 13-வது முறையாகும்.

இந்த வெற்றி குறித்து அனன்யா கூறுகையில், இந்த போட்டியில் வென்றதன் மூலம் 40,000 டொலர்கள் பரிசுத்தொகையை பெற்றுள்ளதாகவும், அதில் சரி பாதியை தனது ஏழு வயது சகோதரருடன் பங்கிட உள்ளதாகவும், தன்னுடைய பங்கை தனது கல்லூரி படிப்பிற்காக வங்கிக் கணக்கில் சேமிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலிருந்தும், அமெரிக்க பிராந்தியங்களான போர்டோ ரீகோ மற்றும் குவாம், ஜப்பான் மற்றும் ஜமைக்கா போன்ற பல நாடுகளிலிருந்தும் 11 மில்லியனுக்கு அதிகமான இளம் போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.