வவுனியாவில் வாய் பேசமுடியாத மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு!!

532


 
இன்று (06.06.2017) வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் வவுனியா அஸ்திரம் நற்பணி மன்றத்தினர் மிகவும் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவிக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றை வழங்கி வைத்தனர். இந்த நிகழ்வு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்றது.

பூவரசங்குளம் மகாவித்தியாலய மாணவியான ஏழாம் ஆண்டு கல்வி கற்கும் செல்வி ரா.வர்ஸா என்பவர் மிகவும் வறுமைப்பட்டவர் .தாய் தந்தை இருவரும் வாய்பேச முடியாதவர்கள் ஜந்து பிள்ளைகளையுடைய இந்த குடும்பத்தில் ஒரு மகனும் வாய் பேச முடியாதவர் யாழ் நவீல்ட் பாடசாலையில் கல்வி கற்கின்றார். தற்போது மூன்று பிள்ளைகள் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர் இவர்களுக்டகு இன்று பிறந்ததினத்தைக் கொண்டாடும் லண்டனைச் சேர்ந்த தேதுசா நாதன் சார்பில் இது வழங்கி வைக்கப்பட்டது. கம்பாறிசன் கருணை அமைப்பு லண்டனில் இருந்து இந்த ஏற்பாட்டை செய்தனர் .



பூவரசங்குளம் மகாவித்தியாலய அதிபர் திரு.தர்மகடாட்சம் நிகழ்வில் கலந்து கொண்டு துவிச்சக்கர வண்டியை வழங்கி வைத்தார்.

அகில இலங்கை செவிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் கணநாதன் குறித்த இந்தக்குடும்பத்தின் நிலையை அறிந்து மாவட்ட சமூகசேவை அலுவலகமூடாக வேண்டுகோள் விடுத்திருந்தார் . நிகழ்வில் அஸ்திரம் அமைப்பின் நா.கிருஸ்ணமூர்த்தி கம்பாறிசன் அமைப்பின் பிரதிநிதி நா.ஸ்ரீகரன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எஸ்.கே.வசந்தன், திருமதி கோமளா ஆகியோர் கலந்து கொண்டனர்.