மைசூர் இளவரசி கர்ப்பம் : 400 ஆண்டு சாபம் நீங்கியது!!

299


மைசூர் ராணி திரிஷிகா நான்கு மாத கர்பமடைந்துள்ளதாகவும், 400 ஆண்டுகால சாபம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறி பொது மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.



399ம் ஆண்டு முதல் விஜயநகர பேரரசின் ஆட்சிப்பகுதியான மைசூரு பகுதியை, உடையார் வம்ச மன்னர்கள் ஆண்டு வந்தனர்.

விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக இருந்த திருமலைராஜாவின் ஸ்ரீரங்கபட்டிணம் மீது 1610-ம் ஆண்டு முதலாம் ராஜ உடையார் போர் தொடுத்தார். இதையடுத்து தலக்காடு எனும் நகரில் திருமலைராஜா தனது மனைவிகளுடன் குடிபெயர்ந்தார்.



இதனிடேயே நோயால் பாதிக்கப்பட்ட திருமலைராஜா மரணமடைந்தார். அவரது 2-வது மனைவி அலமேலம்மா அழகாக இருந்த காரணத்தால், அவர் மீது உடையார் மன்னர் ஒருவர் ஆசைகொண்டதாகவும் இதன் காரணமாக அலமேலம்மா தற்கொலை செய்துகொண்டார் என்றும் அதற்கு முன் அவர், மைசூர் ராஜ வம்சத்துக்கு குழந்தைகளே பிறக்கக் கூடாது என சாபிமிட்டதாகவும் கூறப்படுகிறது.



இதன் காரணமாக அன்று முதல் இன்றுவரை மைசூர் ராஜ குடும்பத்துக்கு நேரடியாக எந்த வம்சமும் இல்லாமல் இருந்து வந்தது.


தத்து முறையிலேயே வாரிசுகள் அமைந்தன. உடையார் மன்னர் வம்சத்தின் கடைசி மன்னரான சாமராஜ உடையார் மகன் ஸ்ரீகண்டதத்த நரசிம்ம ராஜ உடையார் இளவரசராக இருந்து வந்தார்.

கடந்த 2013ம் ஆண்டு இவர் மறைந்தார். பின், அவருடைய தூரத்து உறவினரான யதுவீர் கிருஷ்ண தத்த சாமராஜ உடையார் இளவரசராக முடிசூடப்பட்டார்.


கடந்த ஆண்டு, இவருக்கும் ராஜஸ்தான் துங்கப்பூர் மன்னர் குடும்பத்து இளவரசியான திரிஷிகா குமாரி தேவிக்கும் திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கும் குழந்தை இல்லாமல் போய்விடும் என மக்கள் கவலையில் இருந்தனர்.

இந்நிலையில் திரிஷிகா குமாரி நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அலமேலம்மாவின் சாபம் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.