முதலையை திருமணம் செய்து கொண்ட நகர மேயர்!!

330

 
தெற்கு மெக்சிகோ சாண்ட் பெட்ரோ ஹூமெலூலா என்ற நகரில் மேயர் முதலையை திருமணம் செய்துக்கொண்ட வினோத நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அந்த நகரில் இதுபோன்ற வினோத சடங்கு நடைப்பெறுவது வழக்கம்.

அதுபோன்று கடந்த செவ்வாய் கிழமை ஊர் மீனவ மக்களின் தொழில் சிறப்பாக அமைய இந்த சடங்கு நடைபெற்றுள்ளது.

திருமணத்தில் முதலை மணப்பெண் போல அலங்கரிப்பட்டு, மேயர் அதற்கு முத்தமிட்டு அதோடு நடனமாடினார்.