உயிருள்ள சிலை : சென்னையில் அதிசயம்!!

247

 
சிலை என்றால் நாம் மரத்தினால் அல்லது கல்லினால் செய்த சிலையை தான் நினைப்போம். ஆனால் வாழும் சிலை மனிதன் உள்ளார். அதிலும் சென்னையில்.

ஆம், சென்னை விஜிபி கோல்டன் கடற்கரையில் 32 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் வேலையை அப்துல் அஜீஜ் செய்து வருகின்றார். தினமும் 6 மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல், அசையாமல் நிர்ப்பது தான் வேலை.

விஜிபி நிறுவனத்தின் தலைவர் 1985ல் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். அங்கு பக்கிங்காம் அரண்மனை முன், அசையாமல் நிற்கும் பாதுகாப்பு ஊழியர்களை பார்த்து நாமும் இதே போல சிலரை நிறுத்தினால் என்ன என்ற யோசனை ஏற்பட்டது.

இந்தியா திரும்பிய உடனே தன்னிடம் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் நபர்களை அழைத்து ஒரே இடத்தில் ஆடாமல், அசையாமல் நிற்க சொல்லியுள்ளார். அதில் அப்துல் அஜீஜ் மட்டும் இந்த பணியை சரியாக செய்துள்ளார்.

அப்போது முதல் இன்று வரை சிலை போல நின்று 32 வருடங்களை கழித்துள்ளார். இவரை பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் பலர் இங்கு வருவதாக விஜிபி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சிலை மனிதருக்கு மாதம் 10,000 சம்பளமாக தரப்படுகின்றதாம். சிலையாக நிற்பது சாதாரண விஷயமல்ல, அப்படி நின்றார் ரத்த ஓட்டம் பாதிப்படையும், அதனால் தினமும் யோகா செய்து வருவதாக அப்துல் அஜீஜ் தெரிவித்துள்ளார்.