மரபணு மாற்றம் மூலம் பல மடங்கு சக்தி வாய்ந்த கொழு கொழு நாய்களை உருவாக்கிய சீனா!!

563

 
சீனா விண்வெளி, ரெயில்வே மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. தற்போது பலம் பொருந்திய கொழு கொழு நாய்களை உருவாக்கியுள்ளது.

சோதனைக்குழாய் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த நாய்கள் மற்ற நாய்களை விட பலமடங்கு எடை கொண்டது.

இவை அதிக பலம் வாய்ந்தவை. மிக வேகமாகப் பாய்ந்து சென்று எதிரிகளை வேட்டையாடும் தன்மை கொண்டவை. இவற்றை பாதுகாப்புக்காகவும் பொலிஸ் துறையிலும் பயன்படுத்தலாம்.

பெய்ஜிங்கில் உள்ள பயோ தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த நாயை உருவாக்கியுள்ளனர். சாதாரண நாயில் உள்ள ‘மயோஸ்டேடின்’ என்ற மரபணுவை நீக்கி புதிய சூப்பர் நாய்களை உருவாக்கினர்.

இதே மரபணு மாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனா அதிபயங்கர சக்தி படைத்த நாசகார சூப்பர் மனிதர்களை உருவாக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த தொழில் நுட்பத்தில் நாய்களை உருவாக்கிய 2 ஆவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. முதலிடத்தில் தென்கொரியா உள்ளது.

சீனாவை சேர்ந்த லியாங்ஷியூ என்ற விஞ்ஞானி முதன்முறையாக மரபணு நீக்கப்பட்ட நாய்களை உருவாக்கினார். இவை அதிக எடை கொண்டதாகவும், நல்ல வேட்டையாடும் திறனும், அதிவேகமாக ஓடும் திறனுடனும் இருந்தது. ஆனாலும் அந்த நாய்களால் சர்ச்சைகள் ஏற்பட்டன.