மரணத்தை வென்ற மனிதன் : 40 நிமிடங்களின் பின் உயிர் பிழைத்த அதிசயம்!!

258


மாரடைப்பு காரணமாக நாடித் துடிப்பு நின்று போன ஒருவர் சுமார் 40 நிமிடங்களின் பின்னர் உயிர் பிழைத்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் 26ம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த 36 வயதான ஜான் ஆக்பர்ன் என்பவரே இவ்வாறு மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.



தனது மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்த ஜான் ஆக்பர்னுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.



இதனையடுத்து 911 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்திய நிலையில் அவரது வீட்டிற்கு இரண்டு பொலிஸார் வந்துள்ளனர்.


இந்நிலையில், சி.பி.ஆர் (Cardiopulmonary resuscitation) முறைப்படி ஜான் ஆக்பர்னின் இதயத்தை இயக்க வைக்கும் முயற்சியில் குறித்த இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர்.

சுமார், 42 நிமிடங்கள் வரை மீண்டும் அவருடைய நாடித்துடிப்பு வரும் வரை இருவரும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, நாடித்துடிப்பு வந்த பின்னர் ஆக்பர்ன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், அவர், விரைவில் குணமடைவதற்காக ஒரு வாரத்திற்கு கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மார்பில் உள்ள காயங்களை தவிர, தான் முழுமையான குணமடைந்து விட்டது போல உணர்வதாக ஜான் ஆக்பர்ன் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.