லண்டன் உலக மெய்­வல்­லுநர் போட்டி 2017 : இலங்கையிலிருந்து நால்வர் பங்­கேற்பு!!

343

லண்டன், ஒலிம்பிக் விளை­யாட்­ட­ரங்கில் ஆகஸ்ட் 4ஆம் திக­தி­முதல் 13ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள­களில் இலங்­கை­யி­லி­ருந்து இரண்டு ஆண்­களும் இரண்டு பெண்­க­ளு­மாக நான்கு மெய்­வல்­லு­நர்கள் பங்­கு­பற்­ற­வுள்­ளனர்.

மரதன் ஓட்ட வீரர் அநு­ராத இந்த்­ரஜித் குரே, ஈட்டி எறிதல் வீரர் வருண லக் ஷான் தயா­ரட்ன, மரதன் ஓட்ட வீராங்­கனை ஹிருணி விஜே­ரத்ன, 800 மீற்றர் ஓட்ட வீராங்­கனை நிமாலி லிய­ன­ஆ­ராச்சி ஆகிய நால்­வரே இலங்கை சார்­பாக இம்­முறை பங்­கு­பற்­ற­வுள்­ளனர்.

உலக மெய்­வல்­லுநர் அரங்கில் சுசன்­திகா ஜய­சிங்­க­வுக்குப் பின்னர் இலங்­கையர் எவ­ருமே பதக்கம் வென்­றி­ராத நிலையில் இம்­முறை லண்­டனில் இலங்­கைக்கு பதக்கம் கிடைக்கும் என்று எதிர்­பார்க்­க­மு­டி­யாது.

ஏதென்ஸ் 1997 உலக மெய்­வல்­லுநர் போட்டி, ஒசாகா 2007 உலக மெய்­வல்­லுநர் போட்டி ஆகி­ய­வற்றில் பெண்­க­ளுக்­கான 200 மீற்றர் ஓட்­டத்தில் சுசன்­திகா ஜய­சிங்க முறையே வெண்­கலம், வெள்ளிப் பதக்­கங்­களை வென்­றி­ருந்தார். அத்­துடன் சிட்னி 2000 ஒலிம்பிக் விளை­யாட்டு விழா 200 மீற்றர் ஓட்டப் போட்­டியில் வெள்ளிப் பதக்கம் வென்­றி­ருந்தார்.

எனினும் லண்டன் உலக மெய்­வல்­லுநர் போட்­டியில் இலங்­கைக்கு பதக்கம் கிடைப்­ப­தென்­பது கன­விலும் நினைக்க முடி­யாத ஒன்று என இலங்கை மெய்­வல்­லுநர் சங்­கத செய­லாளர் பிரேமா பின்­ன­வெல தெரி­வித்தார். எனினும் இப் போட்­டி­களில் இலங்­கை­யரின் நேரப் பெறு­திகள் மற்றும் தூரப் பெறு­தி­களில் முன்­னேற்­றத்தை எதிர்­பா­ரப்­ப­தாக அவர் கூறினார்.

அநு­ராத இந்­தி­ரஜித் குறே (39 வயது) லண்­டனில் இருந்­த­வாறு இப் போட்­டியில் பங்­கு­பற்றும் அதே­வேளை ஐக்­கிய அமெ­ரிக்­காவில் வாழ்ந்­து­வரும் ஹிருணி விஜே­ரத்ன (27 வயது) அங்­கி­ருந்து லண்டன் செல்­கின்றார். இவர் சில மாதங்­க­ளுக்கு முன்னர் இயூ­ஜினில் நடை­பெற்ற மரதன் ஓட்­டத்தில் பெண்கள் பிரிவில் சம்­பி­ய­னா­கி­யி­ருந்தார்.

இங்­கி­ருந்து நிமாலி (27 வயது), வருண ஆகியோர் பயிற்­று­ந­ருடன் இன்று இரவு லண்டன் நோக்கி புறப்­ப­டு­கின்­றனர்.
இவர்­க­ளுடன் இலங்கை மெய்­வல்­லுநர் சங்கத் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்­னாண்டோ, செய­லாளர் பிரேமா பின்­ன­வெல, நிமா­லியின் பயிற்­றுநர் சுஜித் அபே­சே­கர ஆகி­யோரும் லண்டன் செல்­ல­வுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதே­வேளை, ஒலிம்பிக் விளை­யாட்டு விழாக்­களில் எட்டு தங்கப் பதக்­கங்­களை வென்­றெ­டுத்த ஜெமெய்க்­காவின் யூசெய்ன் போல்ட் உட்­பட உலகின் நட்­சத்­திர மெய்வல்லுநர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ரியோ 2016 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுடன் ஒலிம்பிக் அரங்கிலிருந்து விடைபெற்ற யூசெய்ன் போல்ட், சர்வதேச அரங்கில் பங்குபற்றவிருக்கும் கடைசி நிகழ்ச்சி இதுவாகும்.