பிறந்த குழந்தையின் வயிற்றில் குழந்தை : அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!

503

 
இந்தியாவில் பிறந்த குழந்தை ஒன்றின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை நகரம் தானே பகுதியில் உள்ள Mumbra பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், கர்ப்பமாக இருப்பதால் அங்குள்ள Bilal என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு கடந்த ஜுலை மாதம் 20 ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சற்று அதிர்ச்சியடைந்தனர்.

ஏனெனில் குழந்தையில் வயிற்றின் உள்ளே மற்றொரு குழந்தை இருந்துள்ளது. இதனால் வயிற்றினுள் இருக்கும் குழந்தையை எடுக்க வேண்டும்,இல்லையென்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதால், குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டது.

குழந்தையின் வயிற்றின் உள்ளே இருந்த குழந்தையும் வெற்றிகரமாக எடுக்கப்பட்டது. வெளியில் எடுக்கப்பட்ட குழந்தை 7 செ.மீற்றர் நீளமும், மூளை மற்றும் எலும்புகள் போன்றவை பாதி நிலையில் வளர்ந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இரட்டை குழந்தைகளாக இருவரும் பிறக்க வேண்டியவர்கள், குறைபாட்டின் காரணமாக மற்றொரு குழந்தை வளர்ச்சி அடையாமல் பாதி நிலையில் இருந்துள்ளது.

வெளியில் எடுக்கப்பட்ட குழந்தை ஆண் குழந்தை எனவும், 150 கிராம் எடை இருந்ததாகவும், அது தொடர்பாக சோதனை மேற்கொள்வதற்காக அக்குழந்தை வேறொரு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை செய்யப்பட்ட குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவரது தாயாரும் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.