அரிசி மற்றும் காய்கறிகளில் ஈயம் கண்டுபிடிப்பு!!

453

அரசி மற்றும் காய்கறிகளில் குறிப்பிடத்தக்க அளவு ஈயம் அடங்கியிருப்பதாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் உணவுகளில் விஷத்தன்மை குறித்து ஆய்வு நடத்தும் திட்டத்தின் பிரதான ஆய்வு அதிகாரி விசேட மருத்துவ நிபுணர் டி.பி. ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகள் தொடர்பாகவும் அவர்களின் உணவு மாதிரிகள் மற்றும் குருதி மாதிரிகளில் ஈயத்தின் அளவு பரிசோதனை செய்யப்பட்டது.

55 குருதி மாதிரிகளில் 26 மாதிரிகளில் ஈயம் அடங்கியிருந்தது. குருதியில் ஈயம் அடங்கியிருப்பதால், குழந்தைகளின் அறிவு வளர்ச்சி குறையும். கிரகிக்கும் திறன் குறைதல்,வளர்ச்சி குறைதல் என்பன ஏற்படும்.

வயது வந்தவர்களின் குருதியில் ஈயம் அடங்கியிருந்தால், உயர் இரத்த அழுத்தம், உடல் ரீதியான உபாதைகள் மட்டுமல்ல ஈயத்தின் அளவு அதிகரித்தால், மரணம் ஏற்படக் கூடிய ஆபத்தும் உள்ளது.
இதனால் இரசாயனங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். விவசாயத்திற்கு இயற்கை பசளைகளை பயன்டுத்த பழகிக்கொள்ள வேண்டும். பொருத்தமான விவசாய பயிர்களை தெரிவு செய்ய வேண்டும்.

அதேவளை மூன்று வேளையும் ஒரே உணவை (சோறு) உண்ணும் பழக்கத்தை மாற்றி, காய்கறி உணவுகளுக்கு பதிலாக இறைச்சி உணவுகளை அதிகமாக உணவு எடுக்க வேண்டும் என யோசனை முன்வைப்பதாகவும் ஆனந்த ஜயலால் குறிப்பிட்டுள்ளார்.