க.பொ.த. சாதாரண தரத்தில் சித்திபெறாதவர்களுக்கும் உயர்கல்விக்கான வாய்ப்பு!!

264

க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தி பெறாதவர்களுக்கும் உயர்தரக் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு இந்த ஆண்டு தொடக்கம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான முன்னோடிப் பரீட்சார்த்த செயற்பாடு இந்த ஆண்டு அக்டோபர் தொடக்கம் 42 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன் கீழ் தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொடுத்தல், பிரதேச ரீதியான கைத்தொழில் துறைகளுக்குத் தேவையான அறிவைப் பெற்றுக் கொடுத்தல், உள்நாடு மற்றும் சர்வதேச ரீதியில் கூடுதல் வாய்ப்பைக் கொண்டுள்ள தொழில்துறைகளில் மாணவர்களைப் பயிற்றுவித்தல் மற்றும் மாணவர்களுக்கு மூன்றாம் நிலைக்கல்வியோடு உயர்கல்வியையும் பெற்றுக் கொடுத்தல் ஆகிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் எதிர்வரும் ஆண்டுகளில் சகல மாணவர்களும் 13 வருடங்கள் வரை பாடசாலைக் கல்வியை தொடரும் வாய்ப்புக்கிடைப்பதுடன், தொழிற்பயிற்சியொன்றைப் பெற்ற நிலையில் பாடசாலையை விட்டு வெளியேறும் வாய்ப்பும் அதன் மூலம் வருமானத்திற்கான வழியை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.