சாமியார் ராம் ரஹீம் சிங் ஆசிரமத்தில் 600 எலும்புக் கூடுகள் : அதிர்ச்சியில் மக்கள்!!

289

சாமியார் ராம் ரஹீம் சிங்கின் தேரா சச்சா சவுதா மடத்தில் 600 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தேரா சச்சா சவுதா அமைப்பின் சீனியர் துணை தலைவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

சாமியார் ராம் ரஹிம் சிங், பாலியல் வழக்கில் 20 வருட தண்டனை பெற்று சிறையில் உள்ளார். அவரது தேரா சச்சா சவுதா ஆசிரம் சிர்சா என்னுமிடத்தில் 600 எக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

அங்கு அண்மையில் போலீசாரும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்நிலையில், சிர்சாவில் உள்ள தேரா சச்சா சவுதா ஆசிரம வளாகத்தில் 600 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கபப்ட்டுள்ளன. அதற்கு தேரா சச்சா அமைப்பின் மூத்த துணை தலைவர் பிஆர் நைன் பதில் அளித்துள்ளார்.

புதைத்தது யார்?

அதில் சீடர்கள் இறந்துபோகும் போது அவரது உடல்களை தேரா சச்சா சவுதா வளாகத்தில் புதைத்தால் முக்தி கிடைக்கும் என்பதால் அங்கு அவர்களது பெற்றோர்களே புதைத்தார்கள் என கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த காவல்துறை உயர் அதிகாரி குல்தீப் பெனிவால் கூறும்போது புதைக்கப்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை கொடுத்துள்ளனர் என கூறினார்.

உடல்கள் புதைப்பு

தேரா சச்சாவில் தேடுதல் வேட்டையை நடத்துவதற்கு ஒருநாள் முன்பு பஞ்சாப்- ஹரியானா நீதிமன்றம், ஏகேஎஸ் பவார் என்பவரை அங்கு கமிஷனர் அந்தஸ்தில் மேற்பார்வையிட நியமித்தது. தேரா சச்சா அமைப்பின் பொறுப்பாளர் சச் கஹூன், ஆசிரம வளாகத்தில் உடல்களை புதைத்ததை ஒத்துக்கொண்டார்.

மரம் நட்ட சாமியார்

இதுகுறித்து மறுப்பு வெளியிட்ட தேரா சச்சா ஆசிரம செய்தித்தாள், சாமியார் ராம் ரஹீம் சுற்றுசூழல் கெட்டுப் போகக் கூடாது என்பதற்காக நீர்நிலைகளில் உடல்களை விடாமல், இங்கு புதைக்க அறிவுறுத்தினார் என விளக்கம் அளித்தது. மேலும் உடல்கள் புதைக்கப்பட்ட பின்பு அதன் மேல் மரங்கள் நடப்பட்டன எனவும் அந்த செய்தித்தாளில் கூறப்பட்டு இருந்தது.

கொலைக்கு சாட்சி

ஆனால் ராம் ரஹீமின் முன்னாள் ஓட்டுநர் கட்டா ராம் ரஹீம் செய்த இரு கொலைக்கு தான் சாட்சி என்றும் மேலும் ஒரு சிறுவனைக் சுட்டுக் கொன்று அதை எரித்ததை தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார். ராம் ரஹீம் ஆசிரமத்துக்குள் 600 எலும்புக்கூடுகள் இருந்தன என்பது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விடயமாக உள்ளது.