வவுனியாவில் ஒரேயொரு மாணவனை புலமை பரிசில் பரீட்சையில் தோற்ற செய்து சித்தியடைய வைத்த அதிபரின் கடும் முயற்சிக்கு பலரும் பாராட்டு!

1696

 
வவுனியா  வடக்குவலயத்துகுட்பட்டதும் நெடுங்கேணி  கல்வி கோட்டத்தில் அமைந்துள்ளதுமான  மிகவும்  பின்தங்கிய கிராமப்புற சூழலில் அமைந்துள்ள  பட்டடை பிரிந்தகுளம் அ.த.க ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்ற மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளதுடன் பாடசாலையையும் கிராமத்தையும்  அடையாளப்படுத்தியுள்ளார்.

ஏனெனில் வவுனியா மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான பட்டடைபிரிந்தகுளம் அ.த.க ஆரம்ப பாடசாலையில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையே 02 என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக  மூன்று பேரை கொண்ட இந்த பாடசலையில் தரம் நான்கில் ஒரு மாணவனையும்   தரம் ஐந்தில்  ஒரு மாணவனையும்  ஒரேயொரு   கடமை நிறைவேற்றும் அதிபரான செல்லத்துரை செந்தில்நாதனையும் கொண்டதுதான் பட்டடைபிரிந்தகுளம் அ.த.க பாடசாலையின் ஆளணி நிலவரம்.

இதில் கெங்காதரன்.கென்றிக்சன் என்ற மாணவன் இந்த ஆண்டு நடைபெற்ற புலமை பரீட்சையில் 160 புள்ளிகளைப்பெற்றுள்ளார்.

மேற்படி மாணவன்  இந்த கிராமத்திலும் குறித்த இந்த பாடசாலையிலும்  புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து  வரலாற்று அத்தியாயத்தை  தொடக்கி வைத்தவராவார்.

மிகவும் பின்தங்கிய கிராமபுற  சூழல் கொண்ட பிரதேசத்தில்  தனது ஆசிரிய பணியையும் கடமைநிறைவேற்று அதிபர் பணியையும்  செவ்வனே செய்து  வெற்றிகண்டிருக்கிறார் செல்லத்துரை செந்தில்நாதன்.

குறித்த மாணவன் சித்தியடைந்ததன் மூலம் பின்தங்கிய நிலையில் இருக்கும் இந்த பாடசாலையை அனைவரும் திரும்பிப் பார்க்கும் நிலையை தோற்றுவித்துள்ளார்.பின்தங்கிய கிராமத்தில் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த குறித்த மாணவன் சாதனை படைத்துள்ளார்.

மாணவனுக்குகல்விகற்பித்துக்கொடுத்ததிரு.செந்தில்நாதன்ஆசிரியருக்குநன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மற்றும் அவரின் பணி மென்மேலும் வளர மனமார வாழ்த்துகின்றோம் என அப்பகுதி மக்கள் வாழ்த்துகின்றனர்.