வவுனியா சிதம்பரம் பொதுநோக்கு மண்டபம் புனரமைப்பிற்கு 15இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!!

227

 
வவுனியா கள்ளிக்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சிதம்பரம் கிராமத்தில் நேற்று காலை 10 மணியளவில் கிராம சக்தி மரநாட்டும் மக்களின் செயற்திட்டம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வவுனியா மாவட்ட திட்டப்பணிப்பாளர் கிருபாசுதனிடம் அப்பகுதி மக்கள் தமது கிராமத்திலுள்ள பொதுநோக்கு மண்டபம் பாழடைந்துள்ளதாகவும் இப்பகுதியில் நாங்கள் குடியேறியபோதும் இவ்மண்டபத்தினை புனரமைப்பு செய்வதற்கு எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை இவ் மண்டபத்தினை புனரமைப்பதற்கு நிதி உதவிகள் பெற்றுத்தருமாறும் தமது கிராமத்திலுள்ள நிகழ்வகளை நடாத்தவதற்கு தமது கிராமத்தில் போதியளவு இடவசதியற்ற நிலையிலுள்ளதாகவும் தமது கிராமத்திலுள்ள பொதுநோக்கு மண்டபத்தினை புனரமைத்துத்தருமாறு கோரியிருந்தனர்.

இதையடுத்து வவுனியா மாவட்ட திட்டப்பணிப்பாளர் தனது உரையில் கள்ளிக்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சிதம்பரம் கிராமத்திலுள்ள பொது நோக்கு மண்டபத்தினை புனரமைப்புச் செய்வதற்கு 15 இலட்சம் ரூபாவினை பெற்றுத்தருவதாகவும் இவ்வருடத்திற்குள் குறித்த பொது நோக்கு மண்டபத்தினை புனரமைப்புச் செய்யுமாறும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் அனுமதி கிடைத்ததும் முற்பணத்தினை பெற்றுத்தருவதாகவும் குறித்த மண்டபத்தின் பணிகளை உடன் ஆரம்பிக்குமாறும் தனது உரையில் தெரிவித்தபோது அப்பகுதி மக்கள் பெரும் ஆரவாரத்துடன் நன்றி தெரிவித்ததுடன் இப்புனரமைப்புப்பணிகளை தமது பகுதிகளிலுள்ள பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கு இணங்கியுள்ளனர்.

இதையடுத்து குறித்த பொதுநோக்கு மண்டபத்தினைப் பார்வையிட்ட பிரதேச செயலாளர் க.உதயராசா, மாவட்ட திட்டப்பணிப்பாளர் கிருபாசுதன் உடனடியாக இந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதுடன் பிரதேச செயலாளரும் தன்னாலான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் பெற்றுத்தருவதாகவும் அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.