கனடாவில் குட்டி யாழ்ப்பாணம் : வாழை இலை உணவால் பிரபலமடைந்த இலங்கை பெண்!!

654

 
இலங்கையில் இருந்து கனடா சென்று அங்கு பிரபலமடைந்த பெண்ணொருவர் தொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவினை தயாரிக்கும் உணவகம் ஒன்றை நடத்திச் செல்லும் பெண் ஒருவர் பற்றிய தகவலே வெளியாகி உள்ளது.

இலங்கையில் இருந்து கனடா சென்றவர்கள் பெரும்பாலும் ரொறண்டோவை மையமாக வைத்தே குடியமர்த்தனர். இதன்காரணமாக ரொண்டோ குட்டி யாழ்ப்பாணமாக மாற்றம் பெற்றது. இதனால் இலங்கை உணவுப் பொருட்கள் ஸ்கார்பாரோ பகுதியில் மிக முக்கியமாகியுள்ளது.

ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் ஸ்கார்பாரோவிற்கு புலம்பெயர்ந்து சென்றனர். இத்தகைய பெரும் மக்கள் தொகை ஸ்கார்பாரோவில் குடியேறியமைனால் இலங்கை உணவகங்கள் மற்றும் கடைகளில் அங்கு வளர்ச்சியை அதிகரித்ததென, இலங்கைப் பெண்ணான மேரி மார்டின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து கனடாவிற்கு சென்ற பின்னர் இந்த கடைகளை அமைப்பதற்கு நீண்ட காலம் எடுக்கவில்லை. அதன் பின்னர் நாம் விரைவாக இலங்கை உணவுகள் சிற்றுண்டிகள் மற்றும் பல்வேறு மரக்கறிகளிலான உணவுகளை பெற்று கொடுக்க ஆரம்பித்தோம். சோறு மற்றும் கறி இலங்கையில் ஒரு பிரதான உணவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் பேக்கரி ஒன்றை ஆரம்பித்தவர் இரண்டு தசாப்தங்களாக சிறப்பாக நடத்தி சென்றுள்ளார். அதனை தொடர்ந்து அண்மையில் அதன் பெயரை மாற்றிய மேரி மார்டின், வேறு இடத்திற்கு தனது பேக்கரியை கொண்டு சென்றுள்ளார்.

அவரது ரோல்ஸ், சமோசாவை விரும்பி பெற்றுக் கொண்டவர்கள் தொடர்ந்தும் அதனை தேடி வருவதற்கு ஆரம்பித்துள்ளனர்.

சோற்று பொதிகளை தயாரித்தவர் அதனை வாழை இலையில் வைத்து வழங்க ஆரம்பித்தார். இதற்கு அந்த பகுதிகளில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

அதனை பெற்று கொள்ள வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையினால் சிறப்பான வருமானம் ஒன்றை அவர் பெற்று வருவதாக மேரி மார்டின் தெரிவித்துள்ளார்.