இந்தியாவில் தனது புதிய சாதனை பதிவுக்காக காத்திருக்கும் லக்மல்!!

466
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று  இடம்பெற்று 1ஆம் நாள் முடிவுக்கு வந்துள்ளது.
இந்தப்போட்டியின் போது அடிக்கடி மழை குறுக்கீடு செய்ததால் அவ்வப்போது போட்டி தடைப்பட்டது வெறுமனே 11.5 ஓவர்கள் மட்டுமே பந்துவீசப்பட்டது.
போட்டியில் பாரிய தடுமாற்றத்தை சந்ததித்த இந்திய அணி நேற்றைய நாள் நிறைவில் 3 முக்கியமான விக்கெட்களை இழந்து 17 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இந்தியாவின் இந்த பாரிய வீழ்ச்சிக்கு இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மல் காரணமாக அமைந்தார்.
நேற்று லோகேஷ் ராகுல், தவான், கோஹ்லி ஆகியோரை ஆட்டமிழக்க செய்து அசத்தினார். அவர் வீசிய 6 ஓவர்களில் (36 பந்துகளில்) எதுவித ஓட்டங்களையும் விட்டுக்கொடுக்காது மெய்டின் ஆக வீசி 3 விக்கெட்களை சாய்த்தநிலையில் புதிய சாதனை ஒன்றுக்காக காத்திருக்கிறார்.
2001 ம் ஆண்டுக்கு பின்னர் அதிகப்படியான பந்துகளில் தொடர்ச்சியாக எதுவித ஓட்டங்களையும் விட்டுக்கொடுக்காத வீரர் எனும் சாதனையே அதுவாகும்.
2015 இல் மேற்கிந்திய தீவுகளின் ஜெரோம் டெயிலர்  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியான 40 பந்துகளில் எதுவித ஓட்டங்களை விட்டுக்கொடுக்காது மிகச்சிறப்பாக பந்துவீசினார்
அந்த சாதனையை தகர்க்கும் வாய்ப்புக்காக இலங்கையின் சுரங்க லக்மல் காத்திருக்கின்றார்.