வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஐயப்பன் மாலையணியும் நிகழ்வு!!

418

 
வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஜயப்பன் மாலை அணியும் நிகழ்வு நேற்று முன்தினம் (17.11.2017) காலை 8 மணியளவில் அம்மா சாமி, பாபு குருசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் 20க்கு மேற்பட்ட ஐயப்பன் பக்த அடியார்கள் மாலை அணிந்து கொண்டனர்.

குடைப்பிடிப்பது, காலணிகள் உபயோகிப்பது , சவரம் செய்து கொள்வது, புலால் உண்பது , பொய்களவு, சூதாடுதல், போதை வஸ்துகள் கூடாது. பகல் நேரத்தில் தூங்கக் கூடாது. இரவில் படுக்கை விரிக்காமல், தலையணை இல்லாமல் சிறு துண்டை மட்டும் விரித்து உறங்க வேண்டும்.

துக்க காரியங்களில் ஐயப்பன்மாரும், அவர் குடும்பத்தவரும் கலந்து கொள்ளக் கூடாது. அப்படி கலந்த கொள்ள நேரிட்டால்தான் அணிந்த மாலையை குருநாதர் மூலம் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பின்னர்தான் கலந்து கொள்ள வேண்டும்.

குழந்தை பிறந்த வீட்டிற்கு அல்லது மஞ்சள் நீராட்டு விழா வீட்டிற்குச் செல்லக் கூடாது. இவைகளை ஐயப்பன் மாலையணியும் அடியவர்கள் தவிர்க்க வேண்டிய பொருட்கள், காரியங்களாகும் என பாபு குருசாமி தெரிவித்தார்.