வலுவடைந்த புதிய தாழமுக்கம் தொடர்பில் புதிய தகவல்!!

264
எதிர்வரும் தினங்களில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்ட புதிய தாழமுக்கம் வலுவிழந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு 1500 கிலோமீற்றருக்கு அப்பால் வங்காள விரிகுடா கடல் பகுதியில் இருக்கும் குறித்த தாழமுக்கமே வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இந்த தாழமுக்க நிலை வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிக்கு நகரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் இந்த தாழமுக்கமானது இந்தியாவை நோக்கி நகரும். எனினும் இதனால் இலங்கைக்கு பாரிய அளவிலான பாதிப்பு ஏற்படாது. இருப்பினும் இது குறித்து அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு – கிழக்கு உட்­பட இலங்­கை­யின் பெரும்­ப­கு­தி­யைத் தாக்­கக் கூடிய புயல் வங்­கக் கட­லில் வலுவடைந்ததாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.