பிரசவத்தில் பெண்ணுக்கு கடற்கன்னி குழந்தை பிறந்த அதிசயம்!!

875


இந்தியாவில் பெண் ஒருவருக்கு கடற்கன்னி உருவம் கொண்ட குழந்தை பிரசவத்தில் பிறந்த நிலையில் நான்கு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது.



மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் முஷ்குரா பிபி (23) என்ற பெண் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு பிரசவத்தில் கடற்கன்னி போன்ற உருவம் கொண்ட குழந்தை பிறந்தது. அதாவது குழந்தையின் இரண்டு கால்களும் ஓட்டியே இருந்தன, அதே போல இடுப்பு பகுதியும் சரியான வளர்ச்சியடையாமல் இருந்துள்ளது.

இதன் காரணமாக அந்த குழந்தையின் பாலினத்தை மருத்துவர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் பிறந்த நான்கு மணி நேரத்தில் குழந்தை உயிரிழந்து விட்டது.



இது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் சுதிப் சஹா கூறுகையில், குழந்தையின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்களிடம் போதிய பணம் இல்லாததால் கர்ப்பமாக இருக்கும் போது சரியான மருந்துகளை அந்த பெண் எடுத்து கொள்ளவில்லை.



மேலும் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து, ரத்த ஓட்டம் சரியாக கிடைக்காமல் போனால் கூட இந்த பிரச்சனை வரும்.


கடற்கன்னி போல பிறக்கும் குழந்தைகளின் நோய்க்கு மெர்மெய்ட் சிண்ட்ரோம் என பெயராகும் என கூறியுள்ளார். மெர்மெய்ட் சிண்ட்ரோம் 60,000லிருந்து 100,000 வரை பிறக்கும் குழந்தைகளில் ஒன்றை தாக்குகிறது.

இந்தியாவில் இது போல ஏற்கனவே கடந்தாண்டு ஒரு குழந்தை பிறந்து இறந்துள்ளது. உலகளவில் மெர்மெய்ட் சிண்ட்ரோம் குறைப்பாட்டால் பிறந்த எந்த குழந்தைகளும் இதுவரை அதிக நாட்கள் உயிரோடு இருந்ததில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.