வவுனியா நான்கு சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!!

756


 
வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று (15.12.2017) மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காகவே இந்தக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.



வடமாகாண சபை உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளருமான ப.சத்தியலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வுவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதா சந்திரகுலசிங்கம் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.



இதன்போது கருத்து தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,



தமிழ் தேசியக் கூட்டமைப்பானது மூன்று கட்சிகளின் கூட்டாக இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறது. வவுனியா ஒரு எல்லைப்புற மாவட்டமாகும். அதில் வவுனியா வடக்கு பிரதேசமானது தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த தமிழர்களின் பூர்வீக பிரதேசமாகும்.


எனினும் கடந்த ஆட்சியில் நெடுங்கேணி பிரதேசத்தின் தெற்கு எல்லையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் கபளீகரம்செய்யப்பட்டு நாசூக்காக திட்டமிட்ட பெரும்பான்மையின குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தக்குடியேற்றங்கள் கடந்த அரசில் இராணுவத்தின் பிரசன்னத்துடன் இருந்தமையினால் பொதுமக்களுக்கு தடைசெய்யப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தி நன்கு திட்டமிட்ட வகையில் குடியேற்றங்கள் நடந்தேறியுள்ளது.

இதனால் தமிழ் மக்கள் வாழும் வட்டாரங்களில் வாக்குகள் சிதறிக்கப்பட்டால் பெரும்பான்மை கட்சிகள் வடக்கு பிரதேச சபையை கைப்பற்றும் நிலை ஏற்படும். எனவே தமிழ் மக்கள் தமது பேதங்களை மறந்து ஒற்றுமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டுமென தெரிவித்தார்.