மூடப்பட்ட வவுனியா வளாகம் மீள ஆரம்பம்!!

268

தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளால் மூடப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தெரிவித்தார்

கடந்த நவம்பர் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்குள் கொண்டாடிய தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா வளாகம் காலவரையரையின்றி மூடப்பட்டிருந்ததுடன் விடுதிகளில் இருந்த மாணவர்களும் உடனயாக வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து வவுனியா வளாகம் காலவரையரையின்றி மூடப்பட்டிருந்ததுடன் விடுதிகளில் இருந்த மாணவர்களும் உடனயாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வயாகத்தின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 13ஆம் திகதியில் இருந்து மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விடுதிகளில் தங்குவதற்கு தகுதிபெற்றவர்கள் கடந்த 13அம் திகதியில் இருந்து தங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் வியாபார கற்கைகள் பீட மாணவர்களுக்கான பரீட்சைகள் யாவும் 2.1.2018 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் வளாக முதல்வர் மேலும் தெரிவித்தார்.