வவுனியாவில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பத்திற்கு வாழ்வளித்த பொலிசார்!!

246


 
வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள வாரிக்குட்டியூர் யுனிட் 6ல் வசித்து வரும் சொலமான் மேரி சாலட் என்பவருக்கு இன்று (10.01.2018) காலை பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தினரின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட புதிய வீடு கையளிக்கும் நிகழ்வு பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசிங்க தலைமையில் இடம்பெற்றது.

வறுமை நிலையில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்திரவின் வழிகாட்டிலில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் முயற்சியில் பூவரசன்குளம் பொலிசாரினால் உதவிகள் வழங்கப்பட்டு 15 இலட்சம் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டினை செட்டிகுளம், பூவரசன்குளம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே உத்தியோக பூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்து பயனாளியிடம் கையளித்தார்.



இந் நிகழ்வில் கிராமசேவையாளர் சிவசுப்பிரமணியம், பொலிஸ் பிரஜைகள் குழுவின் தலைவர், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், மாதர் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.