வவுனியாவில் அரசியல் கட்சிகள் வசமிருந்த மூன்று கட்டிடங்கள் விடுவிப்பு!!

285

தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் முயற்சியால் 15 ஆண்­டு­க­ளா­கத் தம் வசம் வைத்­தி­ருந்த வவு­னியா மாவட்ட செய­ல­கத்­துக்­குச் சொந்­த­மான கட்­ட­டங்­களை 3 அர­சி­யல் கட்­சி­கள் மீளக் கைய­ளித்­துள்­ளன.

வவு­னியா மாவட்ட செய­ல­கத்­துக்­குச் சொந்­த­மான ஊழி­யர் விடு­திக் கட்­ட­டங்­கள் மூன்று கடந்த 15 ஆண்­டு­க­ளாக 3 அர­சி­யல் கட்­சி­கள் வசம் இருந்­தன. அவற்­றுக்­கான கொடுப்­ப­ன­வு­கள் எத­னை­யும் அவை வழங்­க­வில்லை. அந்­தக் கட்­ட­டங்­களை மீள ஒப்­ப­டைக்க வேண்­டும் என்று மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தி­லும் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் அவை மீள­ளிக்­கப்­ப­ட­வில்லை.உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் அறி­விக்­கப்­பட்­ட­பின்­னர் இந்த விட­யம் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் கவ­னத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டது. அர­சி­யல் கட்­சி­கள் வச­முள்ள அரச கட்­ட­டங்­களை மீள ஒப்­ப­டைக்க வேண்­டும் என்று ஆணைக்­குழு அறி­வு­றுத்­தி­யது.

இந்த விட­யத்­தில் தொடர் அழுத்­தங்­க­ளைக் கொடுத்­தது.
ஈ.பி.டி.பி., அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்­சி­கள் தம்­வ­ச­மி­ருந்த அரச கட்­ட­டங்­களை மீள ஒப்­ப­டைத்­தன.