Green Card கோரி விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

336


அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்படும் Green Card இன் எண்ணிக்கையை 45 வீதமாக அதிகரிப்பதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



அமெரிக்காவில் உயர் பதவிகளில் இருக்கு வெளிநாட்டவர்களுக்கு H1B1 விசா வழங்கப்படுகிறது. இந்நிலையில், அந்த நாட்டில் நிரந்தரமாக குடியேறி, பணிபுரிய விரும்புபவர்களுக்கு அமெரிக்க அரசினால் Green Card வழங்கப்படுகிறது.

அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமைக்கான அனுமதியாக இது கருதப்படுகிறது. இந்நிலையில், Green Card விநியோகம் செய்யும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அந்நாட்டு நாடாளுமன்றில் சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



அமெரிக்காவின் எதிர்காலத்தை பாதுகாக்கும் புதிய சட்டத்தின் பிரகாரம் இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு 1.20 இலட்சம் Green Card வழங்கப்படுகின்றன. இதனை 45 வீதம் அதிகமாக 1.75 இலட்சமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், குறித்த சட்டமூலத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கிய பின்னர் அந்நாட்டு ஜனாதிபதி கையெழுத்திடவுள்ளார்.


இலங்கையிலிருந்தும் Green Card கோரி பலரும் விண்ணப்பித்திருக்கும் நிலையில், குறித்த சட்டமூலம் சாதகமாக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்க நலனில் முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.