பூமியை சுற்றி வரும் உலகின் முதல் கார் : ரொக்கெட்டில் ஏலியனுக்கு அனுப்பப்பட்ட தகவல்!!

513


 
“ஸ்பேஸ் எக்ஸ்” என்ற நிறுவனத்தின் தலைவரான எலோன் மஸ்க், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

அதாவது, “உலகின் பெரிய ரொக்கெட்டை ஏவப்போகிறேன், நான் ரொக்கெட் மட்டும் அனுப்பவில்லை, அதில் என்னுடைய டெஸ்லா காரையும் அனுப்பப் போகிறேன்” என்று கூறினார். அதேபோல் செய்தும் காட்டியுள்ளார். இதையடுத்து பூமிக்கு வெளியே இப்போது முதல் கார் சுற்றிக்கொண்டு இருக்கிறது.



உலகின் பெரிய ரொக்கெட்டான ”ஃபல்கான் ஹெவி” ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மூலம் ஏவப்பட்டு இருக்கிறது. இதில்தான் அந்த “செர்ரி ரெட் டெஸ்லா” கார் இருக்கிறது.

காரை விண்ணுக்கு அனுப்பிய எலோன் மஸ்க் “இந்த கார் வானத்தில் மிதந்து மிதந்து அப்படியே எங்காவது செல்லும். அதை எதிர்காலத்தில் வரும் ஏலியன்கள் பார்க்க வாய்ப்பு இருக்கிறது” என்று டுவிட்டரில் கருத்துக்களை பதிவேற்றியுள்ளார். இதற்கு காரணம் அவர் அனுப்பிய காரில் ஏலியனுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.



காரின் அனைத்து சர்க்யூட் போர்டுகளிலும் ”இது பூமியில் மனிதனால் தயாரிக்கப்பட்டது” என்று எழுதி இருக்கிறது. இதில் விண்வெளி உடை அணிந்த பொம்மை மனித உருவம் ஒன்றும் கார் ஓட்டும் இடத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு ஸ்டார் மேன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கார் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்லும் எனப்படுகிறது.



மேலும் இந்த காருக்குள் அனைத்துப் பக்கமும் பெரிய கமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கமரா மூலம் பூமிக்கு புகைப்படம் அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். அத்துடன் வீடியோவும் அனுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.