வங்கப்புலிகளை அவர்களின் சொந்தமண்ணில் வேட்டையாடிய இலங்கையின் சிங்கங்கள்!!

346


 
பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 ஆவது போட்டியில் 215 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி 1-0 என தொடரைக் கைப்பற்றியது.

ரங்கண ஹேரத் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் சுழலில் மிரட்ட பங்களாதேஷின் 2 ஆவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.



பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்திருந்தது.

பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடிவருகின்றது.



இரு அணிகளுக்குமிடையில் சிட்டகொங்கில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.



இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் டாக்காவில் ஆரம்பமானது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.


அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.


இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் சுரங்க லக்மால் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

110 ஓட்டங்களால் முன்னிலை வகித்த இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. தனது 2 ஆவது இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்துவிக்கெட்டுளையும் இழந்து 226 ஓட்டங்களைப்பெற்றது.

இதையடுத்து 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்டது.

இன்று போட்டியின் 3 ஆவது நாளில் 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களைப்பெற்று 215 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.


இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய அகில தனஞ்சய 5 விக்கெட்டுகளையும் ரங்கண ஹேரத் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடரின் ஆட்டநாயகனாகவும் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் ரொஷான் சில்வா தெரிவுசெய்யப்பட்டார்.

இதில் அடுத்தடுத்த ஆட்டங்களில் அருமையாக ஆடிய ரொஷேன் சில்வா தொடர்ச்சியாக தனது நான்கு அரைச் சதங்களைக் பூர்த்தி செய்தார்.

இந்நிலையில் சுழல் மன்னன் ரங்கண ஹேரத் டெஸ்ட் வரலாற்றிலேயே அதிதிறமையான இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனை படைத்தள்ளார். அவர் இது வரை 415 விக்கெட்டுகளை வீழ்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.