வவுனியா நகரசபை இறுதி முடிவுகளில் கூட்டமைப்பு முன்னிலை!!

632

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா நகரசபையில் வட்டார ரீதியான முடிவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 07 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது.

20 அங்கத்தவர்களைக் கொண்ட வவுனியா நகரசபையில் 10 வட்டாரங்களில் இருந்து 12 பேர் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி வட்டார ரீதியில் தாண்டிக்குளம், வவுனியா நகரம், கோவில்புதுக்குளம், பண்டாரிக்குளம், வைரவபுளியங்குளம், குடியிருப்பு, இறம்பைக்குளம் ஆகிய பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை மூன்றுமுறிப்பு மற்றும் பட்டானிச்சூர் ஆகிய இரட்டை அங்கத்துவ வட்டாரங்கள் இரண்டிலும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று 04 ஆசனங்களையும், வெளிக்குளம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் 08 பேர் விகிதாசார ரீதியிலும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத் தகவல்கள் தேர்தல்கள் திணைக்களத்தினால் உறுதி செய்யப்படாதவையாகும். தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வமான முடிவுகள் சற்று நேரத்தில் வெளியிடப்படும்.

தொடர்ந்து வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.