வவுனியா நகரசபை உட்பட 4 சபைகளுக்கும் தவிசாளர், உப தவிசாளர்கள் தெரிவு!!( விபரம் உள்ளே)

646

வவுனியா நகரசபை, வவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை  என்பவற்றுக்கான தவிசாளர்களையும், உப தவிசாளர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது..

இன்று வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதனை அறிவித்தார்.

கடந்த 10ம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வவுனியா நகரசபை, வவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை. வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை  என்பவற்றில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 வவுனியா உள்ளுராட்சி மன்ற தலைவர் உப தலைவர்கள்

வவுனியா நகரசபையின் தலைவர்
நா. சேனாதிராஜா (இரண்டு வருடம்)
த. பரதலிங்கம் (இறுதி இரண்டு வருடம்)

துணை தலைவர்
சந்திரகுலசிங்கம் மோகன்

தமிழ் தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர்
துரைசாமி நடராஜசிங்கம் (இரண்டு வருடம்)
தர்மலிங்கம் யோகராசா (இரண்டு வருடம்)

துணை தவிசாளர்
சிவப்பிரகாசம் சுப்பிரமணியம் (இரண்டு வருடம்)
பூபாலசிங்கம் சந்திரபத்மன் (இரண்டு வருடம்)

செட்டிகுளம் பிரதேசசபை
சுப்பையாக ஜெகதீஸ்வரன் (இரண்டு ஆண்டுகள்)
சிரில் நிருஜன் (இரண்டு வருடம்)

துணை தவிசாளர்
சுப்பிரமணியம் அருள்கரன் (இரண்டு வருடம்)
சுப்பையா ஜெகதீஸ்வரன் (இரண்டு வருடம்) (தலைவராக இருந்தவர்)

வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர்
சபாரத்தினம் தணிகாசலம் (இரண்டு வருடம்)
சோமசுந்தரம் சத்தியேந்திரா (இரண்டு வருடம்)

உப தவிசாளர்
நாகலிங்கம் யோகராசா (இரண்டு வருடம்)
பொன்னையா தேவராஜா ( இரண்டு வருடம்)

முழுமையான விவரங்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்..