வவுனியா பூந்தோட்டம் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட “உதவும் கரங்கள்” அமைப்பு!!(படங்கள்)

534

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழக மற்றும் பூந்தோட்டம் இளைஞர்கள் இணைந்து உதவும் கரங்கள் எனும் சமூக சேவை அமைப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

பூந்தோட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை கடந்த இரு மாதங்களாக இவ் இளைஞர்கள் தமது சொந்த செலவில் வழங்கி வருகின்றார்கள்.

இவ் அமைப்பைபின் மூலம் மேலும் பலருக்கு உதவி செய்வதே தமது நோக்கம் என்றும் இச் சேவையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் உதவி செய்ய விரும்பினால் தங்களால் முடிந்த உதவியை நேரடியாக அவர்களே செய்ய முடியும் என்றும் இவ் அமைப்பு நேரடியாக எந்தவித பண அல்லது பொருள் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடாது என்றும் இவ் அமைப்பின் ஸ்தாபகர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.

இவ்வாறு பிரதேச இளைஞர்கள் சமூக நோக்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் தேவை என்பதுடன் அவர்களுக்கு வவுனியா இணையம் சார்பாக எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நேரடியாக உதவிகளை செய்ய விரும்புவோர் 0772032950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்.

va2 va3 va1