சிறையில் அடைக்கப்பட்ட கணவரின் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பெண்!!

460

Babyபாலஸ்தீனத்தில் உள்ள காஷா பகுதியை சேர்ந்தவர் தமீர்ஷானின் (29). இவரது மனைவி ஹானா ஷானின் (26). கடந்த 2006ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் ஆன 3 மாதத்தில் தமீர்ஷானின் இஸ்ரேல் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே அவரது புதுமனைவி கணவரை பிரிந்து பாலஸ்தீனத்தின் காஷா பகுதியில் குடியேறினார்.

இதற்கிடையே இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமீரை சந்திக்கவும் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில், சிறையில் இருக்கும் தமீர்ஷானின் உயிரணு பாலஸ்தீனத்துக்கு மறைமுகமாக கடத்தப்பட்டது.

பின்னர், அது அவரது மனைவி ஹனாவின் கரு முட்டையுடன் இணைத்து செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அக்கரு ஹனாவின் கருப்பைக்குள் வைத்து வளர்க்கப்பட்டது.

இதன் மூலம் கர்ப்பிணியான ஹனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. எனவே அவர் காஷா சிட்டியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஹாசன் என பெயரிட்டுள்ளார். இது பாலஸ்தீன சிறை கைதிகளுக்கு கிடைத்த வெற்றி என கருதப்படுகிறது.

இஸ்ரேல் சிறையில் 5 ஆயிரம் பாலஸ்தீன கைதிகள் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் இதே முறையில் குழந்தை பெற முடிவு செய்துள்ளனர்.