வவுனியா பூந்தோட்டம் உதவும் கரங்கள் அமைப்பு பல ஏழைக் குடும்பங்களுக்கு உதவி : வறுமைக் கோட்டிற்கு கீழிலுள்ள பல குடும்பங்களுக்கு அவசரமாக உதவி தேவை!!(படங்கள்)

386


வவுனியா பூந்தோட்டம் உதவும் கரங்கள் அமைப்பினர் வறுமைக் கோட்டிற்கு கீழிலுள்ள பல குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு மாதாந்தம் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றார்கள்.

பிரதேச இளைஞர்கள் தாங்கள் ஒன்று திரட்டிய பணத்தின் மூலமும்.உதவிசெய்ய முன்வந்த சிலரின் பங்களிப்புடனும் இவ் உதவியை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.



மேலும் இவ் அமைப்பைனர் வறுமைக் கோட்டிற்கு கீழிலுள்ள பலரரை இனங்கண்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய ஆர்வமுள்ளவர்களின் உதவியை வேண்டி நிற்கின்றனர்.

உதவி செய்ய யாராவது முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான உதவிகளை நேரடியாக செய்வதற்கான தொடர்பை ஏற்படுத்தித் தர நாங்கள் தயாராக உள்ளோம். மேலும் அவர்களுக்கு செய்த உதவி தொடர்பான படங்கள் எமது இணையத்தளத்தில் தொடர்ந்து பிரசுரிக்கப்படும்.



தயவு செய்து இந்தச் செய்தியை படிப்பவர்கள் உங்களால் உதவி செய்ய முடியாவிடினும் இச் செய்தியை உங்கள் பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்வதன் மூலம் இச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.



நேரடியாக உதவிகளை செய்ய விரும்புவோர் 0772032950 என்ற உதவும் கரங்கள் தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0772602904 என்ற வவுனியா நெற் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்.


1 2 4 5