வவுனியா கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் சின்னராசா சுதர்சன் நினைவுக் கிண்ண கிரிக்கெட் போட்டி!!(படங்கள்)

315


வவுனியா கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் சின்னராசா சுதர்சன் நினைவுக் கிண்ண கிரிக்கெட் போட்டி 6 பேர் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இடம் பெற்றது.

16 அணிகள் கலந்து கொண்ட இச் சுற்றுப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு குட் ஸ்டார் மற்றும் செவ்வானம் அணிகள் தகுதி பெற்றன.



இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய செவ்வானம் அணி 30 பந்துகளில் 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு 46 என்ற வெற்றி இலக்கோடு களம் இறங்கிய குட் ஸ்டார் அணி 3.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

இத் தொடரின் நாயகனாக கிரிசாந்தனும் இறுதி போட்டியின் சிறப்பாட்டக்காரராக பிரசாத்தும் தெரிவு செய்யப்பட்டார்கள்.



1 2 3 4 5 6