வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தினரால் கௌரவிக்கப்பட்ட அமைச்சர் ப.சத்தியலிங்கம், திரு. தியாகராசா!!(படங்கள்)

574


வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தினரால் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களிற்கும் மாகாணசபை உறுப்பினர் திரு.தியாகராசா அவர்களிற்கும் அப்பிரதேச பிரமுகர்கள் மற்றும்கலைமகள் சனசமூக நிலைய ஆயுட்கால உறுப்பினர்கள், போசககர்கள் என்ற வகையில் கெளரவிப்பு விழா 23.02.2014 மாலை 4.30 மணியளவில் கலைமகள் சனசமூக நிலைய தலைவர் செல்வராசா தலைமையில் நடைபெற்றது.

இதில் கலைமகள் சனசமூக நிலைய உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். கலைமகள் சனசமூக நிலைய முன்பள்ளி பழைய மாணவிகளின் வரவேற்ப்பு நடனத்துடன் நிகழ்வு ஆரமபமாகியது. தலைவர் செல்வராசா தலைமையுரையாற்றினார்.



நிகழ்வில் கலந்து கொண்டோரில் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவரும் கலைமகள் சனசமூக நிலைய உறுப்பினரும் ஆன சந்திரகுமார் (கண்ணன் ) கலைமகள் சனசமூக நிலைய போசகர் சிவபாலன், கலைமகள் சனசமூக நிலைய ஆயுட்கால உறுப்பினர் விவேகானந்தன் கலைமகள் சனசமூக நிலைய போசகர் எந்திரி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர், வடமாகாண சபை சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி கௌரவ ப.சத்தியலிங்கம், கௌரவ தியாகராசா அவர்களின் சேவைநலன் பற்றியும் அவர்கள் அரச உத்தியோகத்தில் இருந்த பொதுமக்களுக்கு ஆற்றிய சேவைகளையும், சமுகத்தில் இருந்த அக்கறையில் அவர்கள் சமுகத்துக்கு ஆற்றிய சேவைகளையும் குறிப்பிட்டு பேசினர்.

கௌரவ தியாகராசா உரையாற்றும் போது மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் மக்களுக்கான தன் சேவைகளை முன்எடுக்க தான் மிக அர்பணிப்புடன் பாடுபடுவேன் என்றும் கலைமகள் சனசமூக நிலைய உறுபினர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்து கொண்டார்.



சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி கௌரவ ப.சத்தியலிங்கம் பேசும்போது தன்னை தெரிவு செய்த தமிழ் மக்களுக்கும் குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் தமக்கு அளித்த ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார்.



அத்துடன் மாகாணசபையால் முன்னெடுக்கப்படும் முன்னேற்றங்கள் குறித்தும் மாகாணசபையில் முதலமைச்சர் தலைமையில் ஆளும்கட்சி, எதிர்கட்சி என்ற பேதம் இல்லாமல் செயற்படுவது குறித்தும் விளக்கம் அளித்ததோடு முப்பது ஆண்டுகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் மாகாணசபை கொண்டுள்ள பொறுப்பையும் விளக்கினார்.


இறுதியில் செயலாளர் சத்திய காந்தியின் நன்றி உரையுடன் நிகழ்வு முடிவடைந்தது.

11 12 13 14 15 16 17 18 19