295 பயணிகளுடன் மலேசிய விமானம் எரியுண்ட நிலையில் கீழே வீழ்ந்தது : ஏவுகணை தாக்குதலே காரணம் என்று சந்தேகம்!!

403

Fli1

மலேசியாவுக்கு சொந்தமான போயிங் எம்எச் 17 பயணிகள் விமானம் சற்று முன்னர் யுக்ரெய்ன்- ரஸ்ய எல்லைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது விமானத்தில் 295 பயணிகள் பயணித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்ஸ்ரடாமிலிருந்து கோலாலம்பூருக்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி குறித்த விமானம் எரியுண்ட நிலையில் கிழக்கு உக்ரெய்ன் பகுதியில் வான் பகுதியில் இருந்து தரையில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியிலேயே உக்ரெய்ன் போராளிகளுக்கும் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பிரதேசத்தில் பல உக்ரெய்ன் விமானப்படையினரின் விமானங்கள் கடந்த வாரங்களில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

நேற்று காலை உக்ரெய்ன் அதிகாரிகள் சுமத்திய குற்றச்சாட்டின்படி ரஸ்ய விமானப்படையினர் தமது ஜெட் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இதற்கிடையில் உக்ரெய்ன் உள்துறை அமைச்சர் அன்டன் ஹேராஸ்சென்கோவின் தகவல்படி விமானம் ஒன்று 33ஆயிரம் அடி உயரத்தில் வைத்து ஏவுகணையால் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை உறுதிப்படுத்தமுடியவில்லை.