சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் இருந்து 219 சடலங்கள் மீட்பு!!

313


மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானவர்களில் 219 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் 777 ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் விமானம் வழக்கமான பாதையில் செல்லாமல் வேறு திசை நோக்கி வந்ததால், இதனை உளவு பார்க்கும் விமானம் என கருதி புரட்சி படையினர் சுட்டு வீழ்த்தியதில், கடந்த 17ம் திகதி இதில் பயணித்த 293 பேரும் பலியாகியுள்ளனர்.



இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர், இதுவரை 219 சடலங்களை மீட்டுள்ளனர்.

அதில் 192 பேரின் உடல்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கோணிகளில் வைத்து கட்டி வாகனங்களில் ஏற்றி கடத்தி விமானம் விழுந்து கிடந்த இடத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள டோரஸ் என்ற இடத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளன.



அங்கிருந்து உடல்களை இறக்கி, டன்ட்ஸ்க் நகருக்கு செல்கிற ரயிலில் குளிர்பதன வசதியுள்ள பெட்டிகளில் ஏற்றியுள்ளனர்.



இச்சம்பவம் நடந்து 4 நாட்களான நிலையில் உடல்கள் எடுத்துச்செல்லப்பட்டதால், ரயில் நிலையத்தில் துர்நாற்றம் தாங்க முடியாத அளவுக்கு இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஆன்ட்ரி லிசெங்கோ கூறியதாவது, மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ரஷ்ய ஏவுகணையின் தொடர்பை மறைப்பதற்கு தேவையான எல்லாவற்றையும் தீவிரவாதிகள் (ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்) செய்து வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திலிருந்து விமானத்தின் சிதைந்து போன பாகங்களையும், உடல்களையும் அவர்கள் லொறிகளில் எடுத்துச்சென்றுள்ளனர் என்றும் இதன் காரணமாக அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கான ஆதாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.


F1 F2 F3