சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு : விலை அதிகரிக்குமா?

454


Sugar

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் சீனிக்கான வரியை மூன்று ரூபாவால் அதிகரிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த 16ம் திகதியுடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி அதிகரிப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.



இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் சீனிக்கான வரி 25 ரூபாவில் இருந்து 28 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

உள்நாட்டு சீனி உற்பத்தி மற்றும் உலக சந்தையில் சீனியின் விலை குறைவடைந்துள்ளமை என்பவற்றை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு கூறியுள்ளது.



எது எவ்வாறு இருப்பினும் இந்த வரி அதிகரிப்பால் சந்தையில் சீனியின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.