வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோவில் அதிஷ்டலாபச்சீட்டிளுப்பில் வெற்றிபெற்றோருக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு!!

326


வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் பெருவிழா 14.07.2014 அன்று வெகு விமர்சையாக இடம் பெற்றது. பொங்கல் தினத்தன்று அம்மனுக்கு விசேட பூஜைகள் 108 பானைப் பொங்கல், உலங்குவானுர்தி மூலம் புஸ்பாஞ்சலி, காவடி நிகழ்வுகள் இடம் பெற்றதுடன்,

கண்ணகை அடியவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், மற்றும் தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்களான வெங்கட் பிரபு, பிரேம் G அமரன், SPB சரண் , கிரீஸ், சூப்பர் சிங்கர் புகழ் சௌந்தர்யா, தென்னிந்திய முன்னணி இசைக் குழுவான Next Genaration உடன் கலந்து கலக்கிய இன்னிசை இரவு வெகு சிறப்பாக இடம்பெற்றது.



மேற்படி நிகழ்வுகளை 100,000ற்கும் அதிகமான பக்கதர்கள் கலந்து கண்ணகை அம்மனின் அருள் பெற்று நிகழ்வுகளை கண்டு மகிழ்ந்தனர்.

பொங்கல் நிகழ்வை முன்னிட்டு இடம்பெற்ற அதிஷ்டலாபச் சீட்டிளுப்பில் 1வது பரிசான லங்கா அசோக் லேன்ட் டோஸ்ட் வாகனத்தை பிரதேச செயலாளர் திரு கா.உதயராஜா வழங்கினர்.



2வது பரிசாக TVS முச்சக்கர வண்டியை ஆலய பூசகர் திரு.வே.கேதிஸ்வரன் அவர்களும், 3வது பரிசாக HERO மோட்டார் சைக்கிளை திரு.செந்தில் அவர்களும் வழங்கினார்கள்.



இப் பரிசளிப்பு நிகழ்வு நேற்று (25.07) கோவில் வளாகத்தில் ஆலய தர்மகர்த்தா சபை உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
20 21 22 23