இலங்கையின் மக்கள் தொகை 2.1 மில்லியன் ஆனால் தொலைபேசிகள் இணைப்புக்கள் 2.2 மில்லியன்!!!

268


Phones

இலங்கையில் மக்கள் தொகையை விட அதிகளவானோர் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.



தொலைத்தொடர் இந்தளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளமை சிறந்தது என்ற போதிலும் அதில் கெடுதிகளும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் மக்கள் தொகையானது இரண்டு கோடியே பத்து லட்சமாகும். எனினும் இரண்டு கோடியே 20 லட்சம் தொலைபேசிகள் புழக்கத்தில் உள்ளன. மக்கள் தொகைக்கு மேல் தொலைபேசிகள் உள்ளன. நாட்டிலுள்ள அனைவரிடமும் தொலைபேசிகள் உள்ளன.



அலுவலகங்களில் வேறு வேறு வேலைகளுக்காக தொலைபேசியில் பேச அரை மணிநேரம் ஒதுக்க வேண்டும். அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கி கொண்டு 30 நிமிடம் முதல் ஒரு மணிநேரம் வரை தொலைபேசியில் தனிப்பட்ட விடயங்களை பேசுகின்றனர்.



தொழிநுட்ப முன்னேற்றத்தோடு மக்களின் வாழ்க்கை சூழலும் மாறி விட்டது. கொழும்புக்குள் மட்டுமே இருந்த அழகு நிலையங்கள் இன்று நாடு முழுவதும் பரவியுள்ளன. இதன் மூலம் தொழில் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.