மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்த உற்சவம் : அலையென திரண்ட பக்தவெள்ளம்!!

347

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கையில் தமிழர்களின் வரலாற்றின் மிகவும் முக்கியத்தும் மிக்க ஆலயமாகவும் கிழக்கு மாகாண தமிழர்களின் வரலாற்று போக்கிசமாகவும் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.

இராமாயண காலத்துக்கு முந்திய ஆலயமாகவும் இராவணன் மற்றும் இராமனால் வழிபட்ட ஆலயமாகவும் இந்த ஆலயம் இருந்துவந்துள்ளதை கர்ணபரம்பரை கதைகள் மூலமாக அறியமுடிகின்றது.

அத்துடன் இராமாயண காலத்தில் அனுமனின் வாலில் இராவணன் இட்ட தீயினை அணைத்த இடமாக ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக்கேணி இருந்துள்ளதாகவும் புராதன கதைகள் மூலம் அறியலாம்.

இத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் தீர்த்த திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆடி அமாவாசை தினமான இன்று தீர்த்தத் திருவிழாவில் பக்த கூட்டம் அலைமோதியதை காணக்கூடியதாக இருந்தது.

– மட்டக்களப்பிலிருந்து ரமணன்-

2 3 4 5 6 7 8 9 10