வேகமாக கார் ஓட்டிய 3 வயது குழந்தை : தந்தைக்கு வலைவீசும் பொலிஸ்!!

260

சீனாவில் மூன்று வயது குழந்தை கார் ஓட்டியது போன்று வெளியான காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குழந்தை காரை வேகமாக திருப்புவதும், தவறான பாதையில் ஓட்டுவது போல் வெளியான காணொளி சீனா சமூக வளைதளங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

இந்த காணொளியில் இடம் பெற்றுள்ள இடங்கள் நகர பகுதியில் இல்லாமல் தொலைவான பகுதி என்பதால் போக்குவரத்திற்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இந்த சம்பவத்தை பற்றி பொலிசார் எந்தவித கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், தெருவில் குழந்தையை கார் ஓட்ட வைத்த தந்தைக்கு சிறை தண்டணை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தையுடன் இருந்த தந்தையை பொலிசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

C1 C2 C3