வவுனேஸ்வரத்து அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு ஆறாம் நாள் திருவிழா!!

327


பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு ஆறாம் நாள் திருவிழா ஆடி அமாவாசையுடன் சேர்த்து விசேடமாக நடைபெற்றது.

நேற்று காலையில் இருந்து மோட்ச அர்ச்சனைகள் ஒருபுறமும் அமிர்த வர்சினி தீர்த்த கரையில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய அந்தணர்களுக்கு தானியங்கள் மரக்கறிகள் என்பவற்றை அந்தணர் பெருமக்களுக்கு தர்ப்பனம் செய்யும் நிகழ்வும் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்க மறுபுறம் காலை பத்து மணிக்கு மூலஸ்தான பூசை கொடிதம்ப பூசை. தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் மயில் வாகனத்தில் உள்வீதி வெளி வீதி எழுந்தருளி செய்தாள்.



மீண்டும் மாலை இரவு ஆறரை மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் மயில் வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது. தொடர்ந்து மாலையில் வழமைபோல் நாலரை மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி வழமை போல் இரவு ஏழுமணிளவில் அம்பாள் எழுந்தருளி உள்வீதி வெளிவீதி வலம் வந்தாள்.

திருவிழா தொடர்பான விபரங்களுக்கு தொடர்ந்தும் வவுனியா நெற்ருடன் இணைந்திருங்கள்.



-கஜேந்திரன்-



11 12 13 14 15 16 17 18